>

இவர்களே சாதனையாளர்களாய்....!

>> Monday, April 26, 2010

சாதனையாளர்களான - இவர்கள்
தோல்வி படிக்கட்டுகளை மிதித்தே
சாதனை மேடைகளிலும்..
சரித்திர பாடங்களிலும் இடம்பெற்றனர்.

இவ்உலகத்தில் எவராலும் முடியாதது
இவரால் முடியும்! - ஆனால்
இவரால் முடியாதது,
எவராலும் முடியாது!

இவரின் விலகாத விடாமுயற்சி,
தளராத தன்னம்பிக்கை,
அயராத கடின உழைப்பு,

இம்மூன்றால் அசைக்க முடியாத
வெற்றியை எளிதாக பெற்றிடும்
இவர்களே சாதனையாளர்களாய்....
தொடர்கின்றனர்.....!

ஏன் அந்த இவர்களாய்
நாம் இருக்கக்கூடாது
நண்பர்களே?

Read more...

காலமே உன் உயிர்

>> Wednesday, April 21, 2010

                                          நண்பா!

இருக்கும் காலங்களை

இருட்டில் தொலைக்காதே..!

தொலைத்தால் மீண்டும்

”இழந்தகாலம்” கிடைக்குமா..?

கிடைத்தால் ”இறந்தகாலம்”

மீண்டும் நடக்குமா..!?

அனைத்தையும் தெரிந்துகொள்.!

மனிதர்களை புரிந்துகொள்.!

உலகத்தினை அறிந்துகொள்.!

நீ எடுத்த வைக்கும்

ஒவ்வொரு அடியும்

சாதனைகளுக்கு

அடித்தளமாகட்டும்..!

சாதனைகளுடன்....

உன் வாழ்க்கைப்பயணம்

தொடரட்டும்.......!

Read more...

பேருந்துக் காதல்..! - தொடர் பதிவு

>> Thursday, April 1, 2010

அனைத்து வலைப்பதிவு நண்பர்களுக்கும் வணக்கம். ”பேருந்துக் காதல்” தலைப்பே கொஞ்சம் விவகாரமாகத்தான் இருக்கு. தொடர்பதிவு எழுதிட பிரபலபதிவர்கள் வரிசையில் எப்பொழுதாவது பதிவிடும், வலைப்பதிவு வாசகனாய் இருந்த என்னையும் சேர்த்து வாய்ப்பு கிடைத்தால் அனைவரும் பிரபலம்தான் என ஊக்குவித்து இங்கு என்னை அழைத்த எமது அருமை நண்பர் பனித்துளி சங்கர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை இந்த வாய்ப்பின் முலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த தொடர் எங்கே ஆரம்பித்தது என்றும் தெரியல...? எங்கே முடியும் என்று தெரியல...? தொடர் பேருந்தாய் போகிறது....! (அதெல்லாம் உமக்கு எதற்கு அதான் தொடர் பதிவுனு சொல்லிடோம்ல பிறகு எதற்கு ஆராய்ச்சினு மனசுக்குள்ளே திட்டுவது கேட்குது) சரி விஷயத்திற்கு வருகிறேன். இதை எதற்கு கூறுகிறேன் என்றால் அதில் பயணியாக இருந்து பதிவுகளை வாசித்து வந்த என்னையும் ஒரு நாள் ஓட்டுனராகவும், நடத்துனராகவும் இருந்து எமது பயண எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும்படி நமது நண்பர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க... எமது கற்பனை குதிரையை தட்டி விடுகிறேன். அது தறி கெட்டு ஓடினாலும் நீங்க ஓடாதீங்க.... (ஆமா இப்படியெல்லாம் மொக்க போட்டால் ஓடாம என்ன செய்ய..?)

நமது நண்பர் ஒருவர் கல்லூரிச் சென்ற போது அவரது அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டார். கல்லூரிக்குச் சென்ற முதல் இரண்டு ஆண்டுகள் அடிக்கடி பார்த்தாலும் பேசியதேயில்லை... மூன்றாவது ஆண்டின் இறுதிகட்டத்தில்தான் எப்படியும் முடிவு தெரிந்து கொள்ளும் ஆவலுடன் ஒவ்வொரு நாளையும் கழித்தான். இப்படியே நகர்ந்தது அவனது பேருந்தில் ஒருதலை காதல் பயணம்.

வழக்கம் போல் அவன் அன்று கல்லூரிக்குச் செல்ல புறப்பட்டான். கூட்டம் நிறைந்த பேருந்தில் எப்படியோ முண்டியடித்து முன்னேறி உள்ளே சென்றுவிட, சிறிதுநேரத்தில் மற்றொரு பேருந்து நிறுத்தம் வந்தது. உள்ளே வந்ததும் சுற்றும் முற்றும் தேடினான். கடைசி இருக்கைக்கு முன்புறம் சன்னல் ஓரம் அவள் அமர்ந்திருந்தாள். அவளருகில் அமர்ந்திருந்த ஒருபெண் இறங்குவதற்கு எழுந்துவிட, இரண்டு பேர் அமரும் அந்த இருக்கையில் ஒரு இருக்கை யாரும் உட்காராமல் காலியாகதான் இருந்தது. மேலே பார்த்தான் மகளிர்க்காக... என்று எழுதப்பட்டிருந்தது. அவன் பயந்த முகத்துடனும், காதல் பார்வையுடனும் அவள் அருகே சென்று ஏதாவது பேச்சுக்கொடுத்து பேசலாம் என எண்ணினான்.
அப்போது அவள் சிரித்த முகத்துடன், வாங்க.. உட்காருங்க..! என்றால் இவன் பரவாயில்லை இருக்கட்டும்..! என்று பெருமிதமாக கூறினான் உள் ஆசைகளை மறைத்து. அவள் பரவாயில்லை உட்காருங்கள் என்று கையை பிடித்து இழுத்து உட்கார வைத்தாள் அவனுக்கு உள்ளுர கொஞ்சம் தெம்பு வந்தது. தன் காதலை சொல்லி விடலாம் என வாயெடுத்தான் அதற்குள் அவள் தன் கைப்பையிலிருந்து நான்காக மடிக்கப்பட்ட ஒரு கடிதத்தை எடுத்தால்... அவனுக்கு தூக்கி வாரிபோட்டது அக்கடிதம் அவள் காதலை அவனிடத்தில் சொல்வதற்கு எழுதப்பட்டது என நினைத்து இவன் கற்பனையில் மிதந்தான்.
இவனது கை கால்கள் கொஞ்சம் பயத்திலும் ஆர்வத்திலும் நடுநடுங்கியது. வடிவேலு காமெடி நினைவுக்கு வந்தது. ”Building Strorngu But Basement கொஞ்சம் Weak அது இததானோ...”! என்று புன்முறுவலுடன் நினைத்துக்கொண்டான். அப்பொழுது அவள் கூறினால் ”ஆச்சுவேலி எனக்கு தமில் சரியா வராது” சோ. ”நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க..ப்ளீஸ்..! கொஞ்சம் இந்த லெட்டரை கரைக்சன் பண்ணிதரீங்களா..!” நீங்க தமில்ல நல்லா தப்பு இல்லாம எழுதுவீங்களாமே..! நம்ப ப்ரண்டஸ்ங்க... சொன்னாங்க.. அதான் உங்ககிட்ட கேட்டேன் என்றால் கூலாக....! அவன் அக்கடித்தை படித்து பார்த்தான். நிறைய ர,ற கர, ன,ண கர மற்றும் ல,ள கர பிழைகள் துணைக்கால் எழுத்து (உதாரணம் உங்கலை கதாளிக்கிரேன்) மாற்றி போடப்பட்டு என பல பிழைகள் இருந்தது.

ஆனால் அவன் கூறினான் இதை யாருக்கு எழுதீனிர்களோ..! அவர்களுக்கு இது நிச்சயம் புரியும். அதனால் நீங்க இதை இப்படியே அவர்கிட்ட கொடுங்க.. ஒருவேளை அவருக்கு புரியல்லை என்றால் பெயரை மட்டும் அடித்து எழுதிவிட்டு என்கிட்ட மீண்டும் கொடுங்க.. நான் காத்திருக்கிறேன் என்று நாசூக்காக சொன்னான். (மறைமுகமாக தன் காதலை சொன்ன திருப்தியுடன்..) அதற்குள் அவன் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்ததால் இறங்கி சென்றுவிட்டான். (நல்வேளை இறங்கிவிட்டான் இல்லையெனில் என்ன ஆகி இருக்குமோ..? ஹி.. ஹி.. ஹி..)

அன்று முதல் இன்று வரை யாராவது சன்னல் ஓரம் அமர்ந்திருந்தாலோ... பயணச்சீட்டு எடுப்பதற்கு கைப்பையில் இருந்து பணம் எடுத்தாலோ... அவனுக்கு இந்த நினைவுகள்தான் வருவதாக.. அடிக்கடி புலம்புவான். சரி நண்பர்களே ரொம் போர் அடிக்க வைத்துவிட்டோனோ..??!! இது போன்ற அனுபவங்கள், புலம்பல்கள் தங்களுக்கோ, தங்கள் நண்பர்களுக்கோ ஏற்பட்டு இருந்தாலோ...! அல்லது பார்த்து ரசித்து இருந்தாலோ நீங்க நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள கேட்டுக்கொள்கிறேன். தற்போதைக்கு இப்பதிவினை தொடர்பதிவாக எழுதிட நமது கீழ்கண்ட நண்பர்களை அவர்களின் வாசக நண்பர் என்ற முறையில்  நட்புடன்  அழைக்கின்றேன்.

Read more...

நட்பின் பிரிவு

>> Monday, March 8, 2010

“நட்பு மலர்கள்” பிரிவால்

வாடினாலும் அதன் “வாசம்”

என்றும் இதயத்தில் வீசும்...!

சிறகில்லா பறவையும்,

சிறகடித்து பறப்பதென்றால்

“நட்பு” எனும் இறகுகள்

இருப்பதினால் மட்டுமே...!

பாலில் கலந்த நீரைப்போல

எம்இரத்தித்தில் கலந்தது நம் நட்பு..!

பால்நீரிலிருந்தும் பாலை மட்டும்

பிரித்திடுமாம் அன்னப்பறவை...!

எம்இரத்தத்திலிருந்து

நம்நட்பை பிரிப்பதென்றால்...

எம்உயிர் இவ்வுலகை விட்டு

பிரிந்தால் மட்டுமே...!!

Read more...

எமது கற்பனை கவிதைகள்-2

>> Friday, February 19, 2010

மொழி..!
என்னவள் பேசும் "தமிழ்" அமுத மொழி..!

எப்போதாவது பேசும் "ஆங்கிலம்" கணினி மொழி..!

என்னிடம் பேசுவது "மௌன மொழி"..!

இருவரும் பேசுவது "காதல் மொழி"..!

உச்சரித்துப் பேசினால் "கனிமொழி"..!

உதடுகளால் பேசினால் "தேன்மொழி"..!

எதிர்கால உலகத்தில் பேசப்படும்

"முதல் மொழி" என்னவளின் "பழம்பெரும் செம்மொழி"

அதுவே அனைவருக்கும் "செந்தமிழ் மொழி"..!

 கனவுகள்...!

நண்பர்களே ! கனவு காணுங்கள்....!

 என்னைப்போல் கனவுகளில்

கன்னி அவளை காணாதீர்,

நினைவுகளை பெருக்கிடுவாள்...!

நீராய், கானல் நீராய்... மறைந்திடுவாள்..!

பொய்த்தோற்றம் போட்டுடுவாள்...!

பொல்லாதவனாய் உன்னை ஆக்கிடுவாள்...!

ஆழ்வாராய் இருப்பவனையும்,

போக்கிரியாய் மாற்றிடுவாள்...!

Read more...

படித்ததில் மிகவும் பிடித்த புத்தகம்

>> Thursday, January 14, 2010

படிப் படியாய் படி! புத்தக ஆசிரியரைப் பற்றி:

டாக்டர்.இரா.ஆனந்த குமார் இ.ஆ.ப.
 தமிழார்வமும் தன்னம்பிக்கையும் நிரம்பிய இளைஞர்.கவிதைகளின் காதலர்; கருத்துக்களின் கருவூலர். படிப்பை சுமையாய் நினைக்கும் இளைய தலைமுறைக்கு அதை சுகமாய் மாற்றும் கலையை இந்நூலில் கற்றுத் தருகிறார். கேலி சித்திரங்களுடன், தோழைமை உணர்வோடு பேச்சு நடையில் ஆழ்ந்த கருத்துக்களை அடுக்கிச் சொல்லும் புத்தகமாக இந்நூல் வடிவம் பெற்றுள்ளது.

சுயசரிதைக் குறிப்புகளுடன் கூடிய சுய முன்னேற்றப் புத்தகமாக மலர்ந்துள்ள இந்நூல் இளைய தலைமுறைக்கு பிடித்த ஓர் இளம் எழுத்தாளரை அறிமுகப்படுத்துகிறது எனலாம். இந்நூல் வதம்பசேரி கிராம பள்ளியில் கரி அரைத்ததிலிருந்து பின்லாந்தில் பனி உடைத்தது வரை இவரின் அனுபவங்களை பதிவு செய்கிறது.
அன்பார்ந்த வலைப்பதிவு நண்பர்களே!
இங்கு க்ளிக் செய்து படிப் படியாய் படி! நூலை மின் புத்தகமாக படிக்கவும், பதிவிறக்கம் செய்து கொள்ளவும், தங்களுக்கு இந்நூல் பிடித்திருந்தால் தங்கள் நண்பர்களுக்கு தெரிவிக்கவும் கேட்டுக்கொள்கிறேன்.

இப்புத்தகத்தை புரட்டும் வகையில் இங்கே படிக்கலாம்.   

எமது கற்பனை கவிதைகள்-1

>> Saturday, January 2, 2010

நினைவலைகள்..!

பெண்ணே !
உன் கனவுகளே இல்லையென்றால்
என்றோ நான் கண்மு்டியிருப்பேன் !
உன் நினைவுகளே இல்லையென்றால்
என்றோ நான் வீழ்ந்திருப்பேன் !
உன்னை காணாமல் இருந்திருந்தால்
எங்கேயோ காணாமல் போயிருப்பேன் !
உன் நினைவால் என் நினைவில்லை !
என்றுமே என்னில் உன் நினைவலை !
உன் நினைவுகள் என்னை நிழலாய் பின்தொடர்ந்தாலும்
உண்மை நிலையில் என் உள்ளத்தில் உன் உருவம் என்னில் கலந்ததால்
நீ இன்றி என் நிழலில்லை ! உன் நினைவின்றி நான் இல்லை !

*****************
சிரிப்பு...!

மௌனக் கதவுகள் இசைந்து திறக்கும் பொழுதும்...
செவ்"வாய்" இதழ்கள் அசைந்து மலரும் பொழுதும்...
பூக்கின்ற பூவே சிரிப்பு...!

*****************
நண்பர்களின் வருகைக்கு நன்றி!
மீண்டும் வருக!
தங்கள் கருத்துகளையும்,
ஓட்டுகளையும்எதிர்பார்த்து
பிரியமுடன் பிரவீன்குமார்.
******************

எமது கற்பனை கவிதைகள்!

>> Saturday, November 28, 2009

என் வலை உலக தமிழ் நண்பர்களே!
உங்கள் அனைவருக்கும் வணக்கம்!
மிக நீண்ட நாட்களுக்கு பிறகு பதிவிட்டுளேன்
பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளையும்,
ஓட்டுகளையும் பதிவு செய்யுங்கள்!
இப்படிக்கு வலைப்பதிவு வாசகன்.

பெண்ணே !

உன் ஓரப்பார்வை அம்புகளால் தாக்கப்பட்டு

காயம்பட்ட வேடன் நான் !

உன் காந்தப்பார்வை வலை வீச்சீல்

மாட்டித்துடிக்கும் மீனவன் நான் !

உன் நினைவுகளுடன் உருகி,

உனக்காகவே வாழ்ந்து,

கனவுகளுடன் காத்திருக்கும் மூடன் நான் !

***********

பெண்ணே !

மரங்களுக்கு மழைக்காலம் போல்

பறவைகளுக்கு குளிர்காலம் போல்

விலங்குகளுக்கு கோடை காலம் போல்

உன்னை நினைக்கும் ஒவ்வொரு காலமும்

என்னில் வசந்த காலம் ! ஆனாலும்

நீ என்னிடம் பேசியது இறந்தகாலம் !

நான் எனக்குள் பேசுவது நிகழ்காலம் !

உன் நினைவுகளால் என்னாகுமோ என் எதிர்காலம் !

*************

பெண்ணே !

உன் நினைவுகளின் வரவு என்னை விட்ட நீங்காத செலவு !

உன்னால் தன்னம்பிக்கையை என்னுள் கூட்டிக்கொள்கிறேன் !

உனக்கு பிடிக்காததை என்னில் கழித்துக்கொள்கிறேன் !

உன்னை நினைத்தே என் திறமையை பெருக்கிக்கொள்கிறேன் !

உனக்காகவே என் வாழ்க்கையை வகுத்துக்கொள்கிறேன் !

என்றும் உன்னை எனக்கு 100 சதவீதம் பிடித்திருப்பதால்.....!

*************
நண்பர்களின் வருகைக்கு நன்றி!
மீண்டும் வருக!
தங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து

படித்ததில் பிடித்த தத்துவங்கள் & நகைச்சுவைகள்

>> Friday, September 25, 2009

நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோன்றுகிறதோ
அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும். - விவேகானந்தர்.
=========================
வெற்றி என்பது நிரந்தரமல்ல;
தோல்வி என்பது இறுதியானதுமல்ல!
=========================
ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம்.
ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம்.
=========================
நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது; ஆனால்,
ஒரு நல்ல நண்பனின் மவுனம்
இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தும்.
=========================
நல்ல முடிவுகள், அனுபவத்திலிருந்து பிறக்கின்றன;
ஆனால் அனுபவமோ
தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது. - பில் கேட்ஸ்
=========================
சிக்கல்கள் என்பவை, ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை.
அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும்.
அவற்றைக் கடந்து சென்றால்
அவை சிறிதாகிவிடும். இதுதான் வாழ்க்கை!
=========================
மேலாளர்: உன் தகுதி என்ன?
சர்தார்: நான் Ph.D
மேலாளர்: Ph.Dன்னா என்ன?
சர்தார்: Passed high school with Difficulty.
=========================
நானும் சரி ஒரு ரவுண்டுதானேன்னு இன்டர்வியூக்குப் போனேன்.
அங்கே 5பேரும்மா.
மாத்தி மாத்தி கேள்வி கேட்டாங்க.
என்னால முடிஞ்ச வரைக்கும் பதில் சொன்னேன்.
திடீர்னு ஒருத்தன் HRக்கு போன் போட்டு
மச்சான் ஃபிரீயா இருந்தா வாடா.
ஒருத்தன் சிக்கியிருக்கான்னு சொன்னான்.

சரின்னு நானும் 4ஆவது மாடிக்குப் போனேன்.
அங்கே 8 பேரும்மா.
அவங்களால எவ்வளவு முடியுமோ
அவ்வளவு கேள்வி கேட்டாங்க.
நானும் எவ்வளவு நேரம் பதில் தெரிஞ்ச மாதிரியே நடிக்கிறது?
அதுல ஒருத்தன் சொன்னான்
இவன் எவ்வளவு கேள்வி கேட்டாலும் சமாளிக்கிறான்டா
இவன் ரொம்ப அறிவாளின்னு சொல்லிட்டாம்மா.
=========================
(தேர்வு அறையில்)

ஆசிரியர்: டேய் என்னடா... கையில் ஃபார்முலா எழுதியிருக்கே?
மாணவன்: எங்க கணக்கு வாத்தியார்தான் ஃபார்முலா எல்லாம் விரல் நுனியில்இருக்கணும்னு சொன்னார்.
=========================
விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்.
தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும்.
மனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும்.
=========================
அறிவுக்கும் மனசுக்கு சிக்கல் இருக்கும் போது நீங்க மனசு சொல்வதை மட்டும்கேளுங்கள்.

ஏன்னா அறிவு......

சரி விடு. இல்லாததைப் பத்திப் பேச வேண்டாம்.
=========================
ஒண்ணு + ஒண்ணு = ரெண்டு
நீதான் எனக்கு ஃபிரெண்டு.

ரெண்டு + ரெண்டு = நாலு
நீ ரொம்ப வாலு.

மூணு + மூணு = ஆறு
நீ இல்லாம போரு.

நாலு + நாலு = எட்டு
எஸ்எம்எஸ் அனுப்பலன்னா குட்டு.
=========================
நட்பு எனும் கலையானது,
ஒரு நல்ல இசைக் கருவியை வாசிப்பது போன்றது.
முதலில் விதிகளின்படி இந்தக் கருவியை வாசிக்கத் தொடங்க வேண்டும்.
பிறகு விதிகளை மறந்துவிட்டு இதயத்திலிருந்து வாசிக்க வேண்டும்.
=========================
கடவுள்,
நகைச்சுவையுடன் எழுதக்கூடிய ஒரு சிறந்த எழுத்தாளர்.
ஆனால் அவர், நகைச்சுவையுடன் நடிக்கத் தெரியாத
மோசமான நடிகர்கள் பலரைக் கொண்டு தன் நாடகத்தை நடத்துகிறார்.
=========================
30 மாநிலங்கள்
1618 மொழிகள்
6400 சாதிகள்
6 மதங்கள்
6 இனங்கள்
29 பெரிய பண்டிகைகள்
ஒரு நாடு!
இந்தியனாக இருப்பதற்காகப் பெருமைப்படுங்கள்!
=========================
உயிரின் சுவாசம் மூச்சு
கண்களின் சுவாசம் கனவு
இதயத்தின் சுவாசம் துடிப்பு
நாக்கின் சுவாசம் பேச்சு
என் நட்பின் சுவாசம் நீ
=========================
எனக்கு இட்லியைப் பிடிக்காது
தோசையைத்தான் பிடிக்கும்.
ஏன்னா, இட்லி கூட்டமா வேகும்.
தோசை சிங்கிளாத்தான் வேகும்.
கூல்...
=========================
உதவும் கரங்கள்
ஜெபிக்கும் உதடுகளைவிடச் சிறந்தது.
- அன்னை தெரஸா.
=========================
வெற்றி என்பது நிரந்தரமல்ல;
தோல்வி என்பது இறுதியானதுமல்ல!
அதனால்,
வெற்றிக்குப் பிறகு
தொடர்ந்து உழைப்பதை நிறுத்த வேண்டாம்;
தோல்விக்குப் பிறகு
தொடர்ந்து முயல்வதை நிறுத்த வேண்டாம்!
=========================
எல்லாம் சில காலமே - ரமண மகரிஷி
=========================
கண்களைத் திறந்து பார்
அனைவரும் தெரிவார்கள்.

கண்களை மூடிப் பார்.
உனக்குப் பிடித்தவர்கள் மட்டும் தெரிவார்கள்!
=========================
தோல்வியின் அடையாளம் தயக்கம்!
வெற்றியின் அடையாளம் துணிச்சல்!

துணிந்தவர் தோற்றதில்லை
தயங்கியவர் வென்றதில்லை!
=========================
கையில் 10 ரோஜாக்களோடு
கண்ணாடி முன் நில்லுங்கள்!
இப்போது நீங்கள் 11 ரோஜாக்களைக் காண்பீர்கள்!
அந்த 11ஆவது ரோஜா,
உங்கள் புன்னகை!
நீங்ள் இப்போது புன்னைப்பதை நான் அறிவேன்!
=========================
வெற்றியை விரும்பும் நமக்குத் தோல்வியைத் தாங்கும் மனம் இல்லை;
தோல்வியைத் தாங்கும் மனம் இருந்தால் அதுவும் ஒரு வெற்றிதான்.
=========================
உங்களின் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா?
பிரச்சினைகள் வரும்போது அல்ல;
பிரச்சினைகளைக் கண்டு நீங்கள்
பயந்து விலகும்போது. - பாரதியார்
=========================
எவையெல்லாம் அழகாக இருக்கின்றனவோ
எவையெல்லாம் அர்த்தத்துடன் இருக்கின்றனவோ
எவையெல்லாம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருமோ
அவை அனைத்தும் உங்களுக்குக் கிடைக்கட்டும்!
இன்றும் நாளையும் என்றும்.
=========================
இதை மெதுவாகப் படியுங்கள்:

LIFEISNOWHERE
இதை எப்படிப் படித்தீர்கள்?
LIFE IS NO WHERE என்றா?
LIFE IS NOW HERE என்றா?
நாம் பார்க்கிற விதத்தில்தான் வாழ்க்கை இருக்கிறது என்பதை இந்த ஒற்றை வரிஉணர்த்திவிடுகிறது!
=========================
மின்தடை ஏற்படும்போதுதான்
நமக்கு மெழுதுவர்த்தி ஞாபகம் வருகிறது.
அப்படித்தான் பிரச்சினைகளின் போது
ஒரு நண்பர், தீர்வு என்னும் விளக்கேந்தி வருகிறார்.
நான் உனக்கொரு மெழுகுவர்த்தியாக இருப்பேன்
என்ற நம்பிக்கை எனக்குண்டு.
=========================
நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்
உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்!
உங்கள் கண்ணீர்,
உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்!
அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்!
=========================
ஒரு நாள், கடவுள் என்னைக் கேட்டார்:

"இந்த நண்பர் இன்னும் எவ்வளவு காலம்
உன்னுடன் இருக்க வேண்டும்?"

நான் கண்ணீர் உகுத்தேன்.
என் கண்ணீர்த் துளி
ஒரு பெருங்கடலில் விழுந்தது.

நான் இப்போது கடவுளிடம் சொன்னேன்:

"இந்தத் துளியை நீங்கள் கண்டுபிடிக்கும் வரை."
=========================
நீ மற்றவருக்கு வழிகாட்டி ஆவதற்காகப்
பிறந்திருக்கிறாய்.
ஏன் மற்றவர்களிடம் உன் வழிகாட்டியைத்
தேடிக் கொண்டிருக்கிறாய்?
இந்த உலகம்
உன் வெற்றிக் கதையைப் படிக்கக்
காத்துக்கொண்டிருக்கிறது.
=========================
பிறக்கும்போது தாயை அழவைக்கிறோம்
இறக்கும்போது எல்லோரையுமே அழவைக்கிறோம்
வாழும்போதாவது
எல்லோரிடமும் சிரிக்கப் பழகுவோம்.
=========================
2 சொட்டு போட்டா அது போலியோ.
4 சொட்டு போட்டா அது உஜாலா
2880 சொட்டு போட்டா அது குவாட்டர்
இதுதான் இன்னிக்கு மேட்டர்.
=========================
வியர்வைத் துளிகளும் கண்ணீர்த் துளிகளும்
உப்பாக இருக்கலாம்.
ஆனால்,
அவைதான்
வாழ்வை இனிமையாக மாற்றும்.
=========================
ஒவ்வொரு மாநிலப் பெண்களிடமும்
ஒவ்வொரு சிறப்பு உண்டு.

கேரளா: நீண்ட கூந்தல்.
ஆந்திரா: கூரிய மூக்கு
மும்பை: செழுமையான கன்னங்கள்
பஞ்சாப்: பளிச் என்ற நிறம்
தமிழ்நாடு: ஒன்னுமே இல்லேன்னாலும் ஓவரா சீன் போடறது
=========================
நாம் அனைவரும் ஒரே அளவு திறமை பெற்றவர்கள் இல்லை
ஆனால்,
நம் திறமையை வளர்த்துக்கொள்ள
ஒரே அளவு வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறோம்.
- அப்துல்கலாம்.
=========================
ஓர் உண்மை:
நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது,
நீ யாரை விரும்புகிறாயோ
அவரை நினைத்துக்கொள்வாய்!

நீ துயரத்தில் இருக்கும்போது,
உன்னை யார் விரும்புகிறாரோ
அவரை நினைத்துக்கொள்வாய்!
=========================
ஒரு சிறிய கையசைப்பு, நம்மை அழவைக்கலாம்!
ஒரு சிறிய நகைச்சுவை, நம்மைச் சிரிக்கவைக்கலாம்!
ஒரு சிறிய அக்கறை, நம்மைக் காதலில் விழவைக்கலாம்!
ஒரு சிறிய தொடுதல், நம் உணர்வைக் கூர்மைப்படுத்தலாம்!
நானும் நம்புகிறேன்
என் சிறிய குறுஞ்செய்தி,
உனக்கு என்னை நினைவுபடுத்தலாம்!
=========================
உங்கள் இதயத்தில் மகிழ்ச்சி
உங்கள் ஆன்மாவில் புத்துணர்வு
உங்கள் வாழ்வில் வெற்றி
உங்கள் முகத்தில் புன்னகை
உங்கள் இல்லத்தில் அன்பின் நறுமணம்
இவை அனைத்தும் உங்களுக்கு என்றும் கிடைக்கட்டும்!
=========================
அன்பு தமிழ் நெஞ்சங்களே!
உங்கள் கருத்தை வெளிப்படையாக கூறுங்கள்.
- பிரவின்குமார்

சிந்தனை துளிகளை பகிர்வோம் !

>> Wednesday, August 19, 2009

1.நீரோடைக்கும் பாறைக்கும் இடையே நடக்கும்
இடைவிடாத போராட்டத்தின் இறுதியில்
நீரோடை வெற்றி பெறுகிறது
தனது பலத்தினால் அல்ல, தொடர் முயற்சியினால்

2.ஒரு நாள் ஆத்திரம்.. பல நாள் துக்கத்தை தரும்...

3.வீழ்வதில் வெட்கப் படாதே! வீழ்ந்து எழுவதில் தான் வெற்றி காண்பாய்!

4.நாம் எடுத்துக்கொள்வதுதான் வாழ்க்கை. எப்போதும் அது அபபடித்தான் இருந்தது, இருக்கும். வாழ்க்கை மட்டும் மகிழ்ச்சி தராது. அதை மகிழ்ச்சியா வைத்துருக்க நாமும் விரும்ப வேண்டும். வாழ்க்கை உனக்கு நேரமும் இடமும் மட்டும் தரும். நிரப்ப வேண்டியது உன் சாமர்த்தியம்

5.படித்தவனிடம் பக்குவம் பேசாதே, பசித்தவனிடம் தத்துவம் பேசாதே.

6.மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்.

7.உழைப்புக்கு என்றும் மரியாதை உண்டு.

8.வாய்ப்பு ஒரு முறைதான் வரும், இனி வாய்ப்பைத் தேடி நாம் தான் செல்ல வேண்டும்.

9.பகைவரையும் நண்பனாக கருது, பண்பாளன் தான் உலகை வய்ப்படுத்த முடியும்.

10.ஆசைகள் வளர வளர அவனுடய தேவைகள் வளர்ந்து கொண்டே போகும்.

11.எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ அவ்வளவு குறைவாகப் பேசு.

12.மரண பயம் வாழ்நாளைக் குறைத்து விடும்.

13.கோபத்தில் வெளிவரும் வார்த்தைகள் அர்த்தமற்றவை.

14.அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.

15.கவனியுங்கள்உங்கள் எண்ணங்களைக் கவனியுங்கள்அவைகளே வார்த்தைகளாக வருகின்றன்.உங்கள் வார்த்தைகளை கவனியுங்கள்அவைகளே செயல்களாக ஆகின்றன.உங்கள் செயல்களைக் கவனியுங்கள்அவைகளே பழக்கமாகின்றன.உங்கள் பழக்கங்களைக் கவனியுங்கள்அவைகளே உங்கள் நடத்தையாகின்றனஉங்கள் நடத்தையைக் கவனியுங்கள்அவைகளே உங்களுடய எதிர்காலத்தை நிச்சயிக்கின்றன.

ஒரு தந்தையின் கடிதம்:

ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்!

தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.

வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள்.

மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்.

குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும்.

அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.

இதை எழுதிய தந்தை ஆப்ரஹாம் லிங்கன்.

குறிப்பு:
1.நீங்கள் இது போன்று எழுதியிருந்தாலும் அல்லது உங்கள் தந்தை உங்களுக்கு இதுபோல் எழுதியிருந்தாலும் கருத்துரைகளில் வெளியிடலாம்
2.பொதுவான உங்கள் கருத்தையும் கூறுங்கள்.

(1.நீங்கள் இது போன்று எழுதியிருந்தாலும் அல்லது உங்கள் தந்தை உங்களுக்கு இதுபோல் எழுதியிருந்தாலும் கருத்துரைகளில் வெளியிடலாம்)

(2.பொதுவான உங்கள் கருத்தையும் கூறுங்கள்).

Read more...

காலத்தை வென்றவர்களின் பொன்மொழிகள்

>> Friday, July 31, 2009

சுவாமி விவேகானந்தர்:
உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.
வில்லியம் ஷேக்ஸ்பியர்:
வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்
1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.
அடால்ஃப் ஹிட்லர்:
நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது.
ஆலன் ஸ்டிரைக்:
இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.
அன்னை தெரசா:
இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும்.
நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.
பான்னி ப்ளேயர்:
வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்.
லியோ டால்ஸ்டாய்:
ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.
அப்ரஹாம் லிங்கன்:
கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது.
ஐன்ஸ்டைன்:
எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.
சார்லஸ்:
ஒரு பொழுதும் வாழ்க்கையில் நம்பிக்கை, வாக்கு, சுற்றம், இதயம் இந்த நான்கையும் முறித்துக் கொள்ள முயலாதீர்கள். ஏனெனில் அவைகளனைத்தும் உடையும் பொழுது ஒலி எழுப்பாது போனாலும் பெரும் வலியை ஏற்படுத்தும்.

(உங்கள் கருத்துகளையும் குறிப்பிடுங்கள்)

பாய்ஸ் பொன்மொழிகள் - எழுத்தாளர் சுஜாதா

>> Thursday, July 23, 2009

நாம் எடுத்துக்கொள்வதுதான் வாழ்க்கை. எப்போதும் அது அபபடித்தான் இருந்தது, இருக்கும். வாழ்க்கை மட்டும் மகிழ்ச்சி தராது. அதை விரும்ப வேண்டும். வாழ்க்கை உனக்கு நேரமும் இடமும் மட்டும் தரும். நிரப்ப வேண்டியது உன் சாமர்த்தியம்.

எந்தச் சமயத்திலும் கைவிடாமல் குறிக்கோள் வைத்து வெல். முயற்சியை நிறுத்தும்போதுதான் தோற்கிறாய்.

தன்னம்பிக்கை உள்ளவர்கள் தான் சாம்பியன்கள் மற்றவர்கள் நம்பவில்லையென்றாலும் 'நம்மால் முடியும்' என்பதை நம்பியவர்கள், முடியும் என்றால் முடியும்.

தோல்வியிலிருந்து எதும் கற்றுக் கொள்ளாவிட்டால்தான் அது உண்மையான தோல்வி.. தோல்வி உங்களை அடையாளம் காட்டும் நான் மற்றபடி வாழ்ந்தால் இன்னும் தப்புகள் செய்வேன்.

களத்தில் குதியுஙகள். கைகள் அழுக்காகட்டும், தடுக்கி விழுங்கள். எழுந்து நட்சத்திரங்களைச் சாடுங்கள்.

மேதை என்பது ஒரு சதவிகிதம்தான் உள்ளுணர்வு மற்றதெல்லாம் வியர்வை. ஆபத்தில்லாத, ரிஸ்க் எடுக்காத பாதைதான் அதிக ஆபத்தானது.

வெற்றிக்கு அதிக நாளாகும். நாள் மட்டும்தான்.

சின்ன காரியங்களை நன்றாக இப்போது செய்யுங்கள். நாளடைவில் பெரிய காரியங்கள் உங்களைத் தேடிவரும். எல்லா ஆரம்பங்களும் சிறியவையே ஆரம்பிப்பதுதான் கடினம்.

வாய்ப்புகளைப் பெரும்பாலோர் தவறவிடுவதற்குக் காரணம் அவை உழைப்பு வடிவத்தில் வருவதால். இதுதான் சந்தர்ப்பம் என்று எதிலும் எழுதி ஒட்டியிருக்காது.

கிடைப்பது உயிர் வாழப்போதும். கொடுப்பதில்தான் நிஜ வாழ்க்கை இருக்கிறது. மற்றறவரை உற்சாகப் படுத்தும்போது நமக்கு எத்தனை உற்சாகம் ஏற்படுகிறது!

யாரும் தான்தோன்றியல்ல. நம்மை ஆக்கியவர்கள் ஆயிரம்பேர், ஒவ்வொருவரும் நமக்கு ஒரு நல்ல காரியம் செய்திருக்கிறார்கள். உற்சாக வார்த்தை சொல்லியிருக்கிறார்கள். குணத்திலும், எண்ணத்திலும், வெற்றியிலும் உதவியிருக்கிறார்கள்.

நட்சத்திரமாக சொந்த வெளிச்சம் தேவை, சொந்தப்பாதை தேவை. இருட்டைக் கண்டு பயப்படக்கூடாது இருட்டில்தான் நடசத்திரங்கள் நன்றாக ஜொலிக்கும்.

Read more...

கரை தொடாத கனவுகள் !!!

About This Blog

அண்மையில் பதிந்தவை

Blog Top Sites

Lorem Ipsum

1

தமிழ் 10

Footer

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP