>

இவர்களே சாதனையாளர்களாய்....!

>> Monday, April 26, 2010

சாதனையாளர்களான - இவர்கள்
தோல்வி படிக்கட்டுகளை மிதித்தே
சாதனை மேடைகளிலும்..
சரித்திர பாடங்களிலும் இடம்பெற்றனர்.

இவ்உலகத்தில் எவராலும் முடியாதது
இவரால் முடியும்! - ஆனால்
இவரால் முடியாதது,
எவராலும் முடியாது!

இவரின் விலகாத விடாமுயற்சி,
தளராத தன்னம்பிக்கை,
அயராத கடின உழைப்பு,

இம்மூன்றால் அசைக்க முடியாத
வெற்றியை எளிதாக பெற்றிடும்
இவர்களே சாதனையாளர்களாய்....
தொடர்கின்றனர்.....!

ஏன் அந்த இவர்களாய்
நாம் இருக்கக்கூடாது
நண்பர்களே?

காலமே உன் உயிர்

>> Wednesday, April 21, 2010

                                          நண்பா!


இருக்கும் காலங்களை

இருட்டில் தொலைக்காதே..!

தொலைத்தால் மீண்டும்

”இழந்தகாலம்” கிடைக்குமா..?

கிடைத்தால் ”இறந்தகாலம்”

மீண்டும் நடக்குமா..!?

அனைத்தையும் தெரிந்துகொள்.!

மனிதர்களை புரிந்துகொள்.!

உலகத்தினை அறிந்துகொள்.!

நீ எடுத்த வைக்கும்

ஒவ்வொரு அடியும்

சாதனைகளுக்கு

அடித்தளமாகட்டும்..!

சாதனைகளுடன்....

உன் வாழ்க்கைப்பயணம்

தொடரட்டும்.......!

Pages (43)12 Next

கரை தொடாத கனவுகள் !!!

About This Blog

அண்மையில் பதிந்தவை

Blog Top Sites

Lorem Ipsum

1

தமிழ் 10

Footer

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP