>

படித்ததில் மிகவும் பிடித்த புத்தகம்

>> Thursday, January 14, 2010

படிப் படியாய் படி! புத்தக ஆசிரியரைப் பற்றி:

டாக்டர்.இரா.ஆனந்த குமார் இ.ஆ.ப.
 தமிழார்வமும் தன்னம்பிக்கையும் நிரம்பிய இளைஞர்.கவிதைகளின் காதலர்; கருத்துக்களின் கருவூலர். படிப்பை சுமையாய் நினைக்கும் இளைய தலைமுறைக்கு அதை சுகமாய் மாற்றும் கலையை இந்நூலில் கற்றுத் தருகிறார். கேலி சித்திரங்களுடன், தோழைமை உணர்வோடு பேச்சு நடையில் ஆழ்ந்த கருத்துக்களை அடுக்கிச் சொல்லும் புத்தகமாக இந்நூல் வடிவம் பெற்றுள்ளது.

சுயசரிதைக் குறிப்புகளுடன் கூடிய சுய முன்னேற்றப் புத்தகமாக மலர்ந்துள்ள இந்நூல் இளைய தலைமுறைக்கு பிடித்த ஓர் இளம் எழுத்தாளரை அறிமுகப்படுத்துகிறது எனலாம். இந்நூல் வதம்பசேரி கிராம பள்ளியில் கரி அரைத்ததிலிருந்து பின்லாந்தில் பனி உடைத்தது வரை இவரின் அனுபவங்களை பதிவு செய்கிறது.
அன்பார்ந்த வலைப்பதிவு நண்பர்களே!
இங்கு க்ளிக் செய்து படிப் படியாய் படி! நூலை மின் புத்தகமாக படிக்கவும், பதிவிறக்கம் செய்து கொள்ளவும், தங்களுக்கு இந்நூல் பிடித்திருந்தால் தங்கள் நண்பர்களுக்கு தெரிவிக்கவும் கேட்டுக்கொள்கிறேன்.

இப்புத்தகத்தை புரட்டும் வகையில் இங்கே படிக்கலாம்.   

10 கருத்துரைகள்:

அண்ணாமலையான் January 14, 2010 at 8:41 AM  

நன்றி... வாழ்த்துக்கள்...

abul bazar/அபுல் பசர் January 14, 2010 at 9:13 AM  

அழகு தமிழில் உளி கொண்டு செதுக்கிய
அழகு ஓவியமாய்,படிக்க படிக்க பரவசப்
படுத்தும் பக்கங்களை கொண்டு செழுமையாக
வடிக்கப்பட்ட நூல்.
தங்களின் இந்த முயற்ச்சிக்கு மனமார்ந்த
பாராட்டுக்கள்.

பிரவின்குமார் January 14, 2010 at 9:42 AM  

தங்கள் வருகைக்கு மிகவும் நன்றி அண்ணாமலையான் அண்னே!

பிரவின்குமார் January 14, 2010 at 9:44 AM  

தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி அபுல் பசர் அண்னே!

வேலன். January 15, 2010 at 6:06 PM  

வாழ்த்துக்கள்...நண்பரே...(நானும் காஞ்சிபுரம் மாவட்டம் தான்)
வாழ்க வளமுடன்,
வேலன்.

செம்புலம் January 28, 2010 at 9:56 AM  

வாழத்துகள்.

எப்படி படிக்க வேண்டும்?
ஏன் படிக்க வேண்டும் என சொல்லித்தர வேண்டிய காலச்சூழல் தற்போது எழுந்துள்ளது இயல்பானது.

வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் எழுதிய புத்தகமென்றால், படிப்பதற்கு முன்பே வாசிப்பின் விளைவாக எழுகிற செயல்பாடுகளுக்கு உத்திரவாதம் அளிப்பதாக உள்ளது. படித்துவிட்டு மிச்சத்தை தொகுக்கிறேன்.

வணக்கம்
- சென்னைத்தமிழன்

வானூர் ஆன்லைன் January 29, 2010 at 5:50 AM  

அருமையான படைப்பு திரு.பிரவின்குமார் அவர்களே... தங்கள் படைப்பிற்கு நன்றி!

Lucky Limat லக்கி லிமட் February 13, 2010 at 6:14 AM  

பகிர்வுக்கு நன்றி நண்பரே

டெக்‌ஷங்கர் @ TechShankar February 27, 2010 at 4:49 AM  

உங்களுடன் தொலைபேசியில் உரையாடியதில் மகிழ்வடைகிறேன்.

பிரவின்குமார் February 27, 2010 at 6:27 AM  

வேலன் சார்,
சென்னைத்தமிழன் சார்,
வானூர் ஆன்லைன்.காம்,
லக்கி லிமட் சார்,
டெக்‌ஷங்கர் சார், உங்கள் அனைவரின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

தங்களது கருத்துகளை பகிர்ந்திடுங்கள்
அவசியம் தமிழில் சொல்லுங்க.
Loading...

கரை தொடாத கனவுகள் !!!

About This Blog

அண்மையில் பதிந்தவை

Blog Top Sites

Lorem Ipsum

1

தமிழ் 10

Footer

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP