>

காலத்தை வென்றவர்களின் பொன்மொழிகள்

>> Friday, July 31, 2009

சுவாமி விவேகானந்தர்:
உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.
வில்லியம் ஷேக்ஸ்பியர்:
வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்
1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.
அடால்ஃப் ஹிட்லர்:
நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது.
ஆலன் ஸ்டிரைக்:
இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.
அன்னை தெரசா:
இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும்.
நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.
பான்னி ப்ளேயர்:
வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்.
லியோ டால்ஸ்டாய்:
ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.
அப்ரஹாம் லிங்கன்:
கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது.
ஐன்ஸ்டைன்:
எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.
சார்லஸ்:
ஒரு பொழுதும் வாழ்க்கையில் நம்பிக்கை, வாக்கு, சுற்றம், இதயம் இந்த நான்கையும் முறித்துக் கொள்ள முயலாதீர்கள். ஏனெனில் அவைகளனைத்தும் உடையும் பொழுது ஒலி எழுப்பாது போனாலும் பெரும் வலியை ஏற்படுத்தும்.

(உங்கள் கருத்துகளையும் குறிப்பிடுங்கள்)

3 கருத்துரைகள்:

பிரவின்குமார் August 3, 2009 at 1:21 AM  

வருகைக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி அம்மு.

புதுப்பாலம் August 9, 2009 at 12:37 AM  

சிறந்த அறிவுரைகள். அதன்படி நடக்க முயற்சிப்போம்

=இஸ்மாயில் கனி

பிரவின்குமார் August 10, 2009 at 12:52 AM  

வருகைக்கு மிக்க நன்றி!
இஸ்மாயில் கனி நண்பரே!

தங்களது கருத்துகளை பகிர்ந்திடுங்கள்
அவசியம் தமிழில் சொல்லுங்க.
Loading...

கரை தொடாத கனவுகள் !!!

About This Blog

அண்மையில் பதிந்தவை

Blog Top Sites

Lorem Ipsum

1

தமிழ் 10

Footer

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP