துணிவை துணையாக்குவோம்!
துணிவைத் துணையாக்கிஅச்சத்தை அச்சப்படுத்துவோம்!
அகிலமே நமதென்றுஎதிலும் வெற்றி கொள்வோம்!
மனதில் அச்சம் குடிகொண்டிருந்தால் உங்களால் எதையும் முழுமையாகச் செய்ய முடியாது. ஆகவே முதலில் அச்சத்தை மனதில் இருந்து வெளியேற்ற வேண்டும். அச்சத்தை வெளியேற்றும் ஆற்றல் தன்னம்பிக்கைக்குத் தான் உள்ளது. எனவே மனதில் தன்னம்பிக்கை சுடர் விட வேண்டும். மேலும் உங்கம் வாழ்க்கையில் வெற்றிபெற சமுதாயத்தில் உள்ள பல்வேறு தரப்பட்ட மக்களிடையே சுமூகமாகவும் இணக்கமாகவும் பழகவேண்டும். அப்பொழுது தான் அவர்களின் அன்பையும், உதவியையும் பெற்று உங்களால் உயர முடியும். அவ்வாறு அனைவரிடமும் அன்பாகவும், இயல்பாகவும் பழகுவதற்கும் அச்சம் தடையாக இருக்க ஒரு போதும் அனுமதிக்கக்கூடாது. அதாவது நாம் யாரைப் பார்த்து பயப்படுகின்றோமோ அவர்கம் மீது அன்பு செலுத்த முடியாது. அச்சம் நீங்கினால் தான் ஒருவர் மீது அன்பு செலுத்த முடியும். அவருடைய நல்ல பண்புகளை புரிந்து கொள்ள முடியும்.
நடந்தவைகளை எண்ணி சிலர் வருந்துவதன் காரணமாகவும் மனதில் அச்சம் குடிபுகுந்து விடுகின்றது. ஆகவே நடந்த தவறுகளை திருத்திக் கொண்டு முன்னேற வேண்டுமே தவிர தேவையில்லாமல் வருந்தக் கூடாது.
மரியாதை வேண்டும்
மண்ணைப் பார்த்து விதை அச்சப்படுகின்றது என்றால் அது முளைப்பது எப்படி? நீரைப் பார்த்து மீன் அச்சப்படுகின்றது என்றால் அது பிழைப்பது எப்படி? அச்சம் என்பது வேறு; மரியாதை என்பது வேறு. அச்சம் நமது சிந்தனைகளை முடக்கும். மரியாதை நமது சிந்தனைகளைச் சீராக்கும். ஆகவே எதையும் அச்சமின்றி அணுகுமாறு தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். வளர்கின்ற வயதில், நமது இளைய மனங்களில் பிறர் அச்சத்திற்கு அஸ்திவாரம் அமைத்திருக்கக் கூடும். ஆகவே நமது செயல்களை சுயமாகக் கண்காணித்து, நமது சுபாவத்தை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும்.
மரியாதை செலுத்தினால் மதிப்பு உயரும். அதாவது, மரியாதை என்பது மனதால் ஒருவரை மதிப்பது; அச்சம் என்பது அவரைப் பார்த்து உடலும், உள்ளமும் நடுங்க பயப்படுவதால் உண்டாகும் தாழ்வான எண்ணம். மேலும் அச்சம் தாழ்வு மனப்பான்மையையும் கோழைத்தனத்தையும் உண்டாக்கும். மரியாதை தன்னம்பிக்கையையும் துணிச்சலையும் உருவாக்கும். ஆகவே மற்றவர்கும் மீது மரியாதை செலுத்தக் கற்றுக் கொள்ளுங்கள்.
தன்னம்பிக்கை வேண்டும்
`தவறு நேர்ந்துவிடுமோ?' என்ற அச்சமே தவறு ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணமாக இருக்கிறது என்று மனோதத்துவ அறிஞர்கள் கூறுகிறார்கள் மேலும், எதையும் சிறப்பாகச் செய்து முடிக்க முடியும் என்று நம்புகின்றபோது, உங்களுடைய ஆழ்மனதின் முழு ஆற்றலும் வெளிப்பட்டு, எதுவாயினும் அதைச் சிறப்பாகவும் முழுமையாகவும் செய்து உங்களால் வெற்றி பெற முடிகின்றது. சிறுசிறு முயற்சிகளைச் செய்து கொண்டே இருங்கள். முயற்சிச் சிறகுகள் முளைக்கும் போது அச்சத்தின் ஆதிக்கம் குறைத்து விடுவதை உணர்வீர்கள்.
நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையும், வீழ்ந்தாலும் உங்களால் எழுந்துவிட முடியும் என்ற தன்னம்பிக்கையும் உங்களுடைய மனதில் சுடர் விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். பிரச்சினைகளின் தொகுப்பே வாழ்க்கை என்பதையும், பிரச்சினைகளை தீர்ப்பதே வெற்றி என்பதையும் புரிந்து கொம்ளுங்கள். பின்னர் பிரச்சினைகள் உங்களை பயமுறுத்துவது குறைந்து விடும். சிக்கல்களைத் தீர்க்க ஆக்கப்பூர்வமாக சிந்திக்க வேண்டுமே தவிர அச்சப்படக்கூடாது.பிரச்சினைகளை எதிர்கொள்ளுங்கள்
பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போது, பிரச்சினைகள் நம்மைப் பார்த்து பின்வாங்கத் தொடங்குகின்றது. துணிச்சல் நம்மிடம் துணைக்கு இருக்கும் போது எரிமலையும் பணிந்து பனிமலையாகின்றது. ஆம்! எதையும் நமக்குச் சாதகமாக மாற்றும் சக்தி துணிச்சலுக்கு உள்ளது. எதிர்த்து நிற்கும் போது, அச்சம் நம்மைவிட்டு விடை பெற்றுக் கொள்கின்றது.
ஒருசமயம் சுவாமி விவேகானந்தர் காசி நகரில் ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு குரங்கு அவரைப் பின் தொடர்ந்து வந்து கொண்டு இருந்தது. உருவத்தில் மிகவும் பெரியதாக இருந்த அக்குரங்கு அச்சத்தை ஊட்டுவதாக இருந்தது. குரங்கைப் பார்த்து அஞ்சிய விவேகானந்தர் வேகமாக நடந்தார். குரங்கும் அவரை வேகமாக பின் தொடர ஆரம்பித்தது. பின்னர் அவர் ஓட ஆரம்பித்தார். குரங்கும் ஓடி வந்தது.
பின்னர் திடீரென அப்படியே நின்று குரங்கையே உற்றுப் பார்த்தார் விவேகானந்தர். குரங்கும் அப்படியே நின்று கொண்டது. பின்னர் சில நொடிகளில் திரும்பி ஓட ஆரம்பித்தது.
இந்நிகழ்ச்சி, நமக்கு ஒன்றைத் தெளிவு படுத்துவதாக இருக்கின்றது. அதாவது சிக்கல்களைக் கண்டு நாம் அஞ்சி ஓடினால் சிக்கல்களும் நம்மை விடாமல் துரத்தும். அவ்வாறு ஓடாமல், துணிந்து நின்று எதிர்க்க தொடங்கினால் சிக்கல்கள் சிதறுண்டு போகும்.
செயல்திறனை அதிகமாக்குங்கள்
ஒருவருக்கு செயல்திறன் குறைவாகும் போது அவருடைய மனதில் தாழ்வு மனப்பான்மை தவழ்ந்து கொண்டு இருக்கும். `நம்மால் நன்றாகச் செய்ய முடியுமா?' என்ற அவநம்பிக்கையும் அவ்வப்போது மனதில் தலைதூக்கிக் கொண்டே இருக்கும். ஆகவே உங்களுடைய அறிவையும் செயல் திறனை அதிகமாக்கிக் கொள்ள முயலுங்கள். முறையான பயிற்சியும் முழுமையான முயற்சியும் உங்களிடம் இருக்குமானால் எத்தகைய சிறப்புத் திறமைகளையும் எளிதில் கற்றுக் கொம்ள முடியும். ஆகவே உங்களை நீங்களே சுய ஆய்விற்கு உட்படுத்துங்கம். உங்களுடைய திறமைகம் எவ்வாறு உள்ளன என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதாவது அவை நீங்கள் செய்யும் பணியை சிறப்பாகச் செய்வதற்குப் போதுமானதாக உள்ளதா? அவ்வாறு போதுமான திறமைகம் இருந்தும் உங்களால் ஏன் செம்மையாகச் செயல்பட முடியவில்லை? என்பது போன்ற பல்வேறு வினாக்களை மனதில் எழுப்பி, உங்களை நீங்களே எடை போடுங்கம். அப்பொழுதுதான் உங்களை நீங்களே புரிந்து கொள்ள முடியும்.
மேலும், உங்களுக்கு இருக்கும் திறமைகம் போதுமானதாக இல்லாவிட்டால், தேவையான திறமைகளை வளர்த்துக் கொள்ள திட்டமிட்டு முயலத் தொடங்குங்கள். முயற்சிச் சிறகுகள் அசையும் போது அகன்ற வானத்தையும் அகப்படுத்த முடியும். முயலுங்கள்! வெற்றிக் கனியின் சுவை உணரத் தொடங்குங்கள்.
துணிவைத் துணையாக்குங்கள்
`நடப்பது நடக்கட்டும்! எதுவாயினும் சந்திப்பேன்! சவால்கம் என்னை எதுவும் செய்து விட முடியாது' என்று எண்ணிக் கொண்டே இருங்கம். பின்னர் படிப்படியாக அச்ச மேகங்கம் விலகுவதையும் தன்னம்பிக்கைச் சூரியனின் சுடரொளி உங்களுக்கும் பரவத்தொடங்குவதையும் உங்களால் உணர முடியும். கடந்த காலத்தில் ஏற்பட்ட தோல்விகம் மற்றும் அவமானங்களை குறித்து அடிக்கடி எண்ணுவதை விட்டு விட்டு, நடந்த நல்ல நிகழ்வுகளையும், உங்களுக்குக் கிடைத்த பாராட்டுக்களையும் மனத்திரையில் ஓடவிடுங்கம். உங்களை நீங்களே உணரத் தொடங்குவீர்கம். உங்களுக்கும் புதைந்தும்ள ஆற்றலின் அடையாளம் மெல்ல மெல்ல தெரியத் தொடங்கும்.
துணிவைத் துணைவனாக்குங்கம். வெற்றி என்பது துணிந்து செய்தவைகளின் விளைச்சலாகும். உங்களுக்கும்ள திறமைகளை வெளிக்காட்டும் சந்தர்ப்பங்களை சவால்கம் உருவாக்கிக் கொடுக்கும். ஆகவே எத்தகைய சவால்களையும் தன்னம்பிக்கையோடு எதிர்நோக்குங்கம். தோல்விகம் உங்களைக் கண்டு பின்வாங்கத் தொடங்கும்.
திட்டமிட்டுச் செயல்படுங்கள்
எதைச் செய்வதாயினும் திட்டமிட்டுச் செய்வதை உங்களுடைய பழக்கமாக்கிக் கொம்ளுங்கம். திட்டமிட்டுச் செயல்படும் போது, உங்களுடைய செயல்கம் வெற்றியைக் கொடுப்பது உறுதியாகின்றது. மேலும் ஒரு செயலைச் செய்யும் முன்னர், அச்செயலைச் செய்வதால் ஏற்படும் விளைவுகளைச் சற்று எண்ணிப்பாருங்கம். விளைவுகளை முன்கூட்டியே எண்ணிப் பார்க்கும் ஆற்றல் மனித இனத்திற்கு மட்டும் சிறப்பாக உம்ள முக்கிய திறமையாகும். ஆகவே இத்திறமையைப் பயன்படுத்தி விரும்பிய முடிவுகளை பெற்று முன்னேறுங்கம்.
வாழ்க்கை என்பது ஒரு நதி என்றால், அதில் எதிர் நீச்சல் போடுபவர்களே சாதனை படைக்கின்றார்கம். எதிர் நீச்சல் போடுவதற்கு உம்ளத்தில் துணிவும் சிந்தனையில் தெளிவும் வேண்டும். ஆகவே ஒவ்வொரு விடியலிலும் புத்துணர்வோடு கண்களை விழித்தெழுங்கம். உம்ளத்தில் உற்சாகம் ஊற்றெடுக்க செயலைத் தொடங்குங்கம். சவால்களைச் சந்திக்கும் துணிச்சலோடு உழைப்பு வீதிகளில் உலாப் போங்கம். வெற்றியின் விடியல் உங்களுக்கும் நிகழத் தொடங்கும்.தன்னம்பிக்கையும் தளராத முயற்சியும் இதயத்தின் இருப்புக் கணக்கில் இருந்தால் சோதனைகளை வென்று சாதனை படைக்கலாம்.
நன்றி. இளைஞர் மலர் - தன்னம்பிக்கை தொடர்
3 கருத்துரைகள்:
Throw open your blog for all people. Not only to invited persons.
Thank u sir. I will rectify this.
தன்னம்பிக்கையும் தளராத முயற்சியும் இதயத்தின் இருப்புக் கணக்கில் இருந்தால் சோதனைகளை வென்று சாதனை படைக்கலாம்.
correct pravin kumar
Post a Comment