சிந்தனை துளிகளை பகிர்வோம் !
1.நீரோடைக்கும் பாறைக்கும் இடையே நடக்கும்
இடைவிடாத போராட்டத்தின் இறுதியில்
நீரோடை வெற்றி பெறுகிறது
தனது பலத்தினால் அல்ல, தொடர் முயற்சியினால்
2.ஒரு நாள் ஆத்திரம்.. பல நாள் துக்கத்தை தரும்...
3.வீழ்வதில் வெட்கப் படாதே! வீழ்ந்து எழுவதில் தான் வெற்றி காண்பாய்!
4.நாம் எடுத்துக்கொள்வதுதான் வாழ்க்கை. எப்போதும் அது அபபடித்தான் இருந்தது, இருக்கும். வாழ்க்கை மட்டும் மகிழ்ச்சி தராது. அதை மகிழ்ச்சியா வைத்துருக்க நாமும் விரும்ப வேண்டும். வாழ்க்கை உனக்கு நேரமும் இடமும் மட்டும் தரும். நிரப்ப வேண்டியது உன் சாமர்த்தியம்
5.படித்தவனிடம் பக்குவம் பேசாதே, பசித்தவனிடம் தத்துவம் பேசாதே.
6.மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்.
7.உழைப்புக்கு என்றும் மரியாதை உண்டு.
8.வாய்ப்பு ஒரு முறைதான் வரும், இனி வாய்ப்பைத் தேடி நாம் தான் செல்ல வேண்டும்.
9.பகைவரையும் நண்பனாக கருது, பண்பாளன் தான் உலகை வய்ப்படுத்த முடியும்.
10.ஆசைகள் வளர வளர அவனுடய தேவைகள் வளர்ந்து கொண்டே போகும்.
11.எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ அவ்வளவு குறைவாகப் பேசு.
12.மரண பயம் வாழ்நாளைக் குறைத்து விடும்.
13.கோபத்தில் வெளிவரும் வார்த்தைகள் அர்த்தமற்றவை.
14.அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
15.கவனியுங்கள்உங்கள் எண்ணங்களைக் கவனியுங்கள்அவைகளே வார்த்தைகளாக வருகின்றன்.உங்கள் வார்த்தைகளை கவனியுங்கள்அவைகளே செயல்களாக ஆகின்றன.உங்கள் செயல்களைக் கவனியுங்கள்அவைகளே பழக்கமாகின்றன.உங்கள் பழக்கங்களைக் கவனியுங்கள்அவைகளே உங்கள் நடத்தையாகின்றனஉங்கள் நடத்தையைக் கவனியுங்கள்அவைகளே உங்களுடய எதிர்காலத்தை நிச்சயிக்கின்றன.
ஒரு தந்தையின் கடிதம்:
ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்!
தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.
வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள்.
மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்.
குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும்.
அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.
இதை எழுதிய தந்தை ஆப்ரஹாம் லிங்கன்.
குறிப்பு:
1.நீங்கள் இது போன்று எழுதியிருந்தாலும் அல்லது உங்கள் தந்தை உங்களுக்கு இதுபோல் எழுதியிருந்தாலும் கருத்துரைகளில் வெளியிடலாம்
2.பொதுவான உங்கள் கருத்தையும் கூறுங்கள்.
5 கருத்துரைகள்:
நல்ல கருத்துகள்..நன்றி
"Geetha Achal said...
நல்ல கருத்துகள்..நன்றி"
Thank you very much.
Visit and Good Comment to me.
ரொம்ப நல்ல இருக்கு
நேறைய எழுத வாழ்த்துக்கள்
//உலவு.காம் ( புதிய தமிழ் திரட்டி ulavu.com) said...
ரொம்ப நல்ல இருக்கு
நேறைய எழுத வாழ்த்துக்கள்//
நன்றி! நன்றி! நன்றி!
நல்ல கருத்துகள் ரொம்ப நல்ல இருக்கு நேறைய எழுத வாழ்த்துக்கள்.....
தமிழ்வாழ்க..! தமிழன்வளர்க..!
Post a Comment