>

எமது கற்பனை கவிதைகள்-2

>> Friday, February 19, 2010



மொழி..!
என்னவள் பேசும் "தமிழ்" அமுத மொழி..!

எப்போதாவது பேசும் "ஆங்கிலம்" கணினி மொழி..!

என்னிடம் பேசுவது "மௌன மொழி"..!

இருவரும் பேசுவது "காதல் மொழி"..!

உச்சரித்துப் பேசினால் "கனிமொழி"..!

உதடுகளால் பேசினால் "தேன்மொழி"..!

எதிர்கால உலகத்தில் பேசப்படும்

"முதல் மொழி" என்னவளின் "பழம்பெரும் செம்மொழி"

அதுவே அனைவருக்கும் "செந்தமிழ் மொழி"..!

 கனவுகள்...!

நண்பர்களே ! கனவு காணுங்கள்....!

 என்னைப்போல் கனவுகளில்

கன்னி அவளை காணாதீர்,

நினைவுகளை பெருக்கிடுவாள்...!

நீராய், கானல் நீராய்... மறைந்திடுவாள்..!

பொய்த்தோற்றம் போட்டுடுவாள்...!

பொல்லாதவனாய் உன்னை ஆக்கிடுவாள்...!

ஆழ்வாராய் இருப்பவனையும்,

போக்கிரியாய் மாற்றிடுவாள்...!

20 கருத்துரைகள்:

அகநாழிகை February 20, 2010 at 12:09 AM  

வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்கள்.

அண்ணாமலையான் February 20, 2010 at 12:11 AM  

congrats.... keep writing

சைவகொத்துப்பரோட்டா February 20, 2010 at 6:27 AM  

வாழ்க உங்கள் தமிழ்பற்று, அருமை.

பிரவின்குமார் February 22, 2010 at 6:45 AM  

அகநாழிகை பொன்.வாசுதேவன் சார்,
அண்ணாமலையான் சார்,
சைவகொத்துப்பரோட்டா சார்,
தாங்கள் வருகை தந்தமைக்கும், வாழ்த்தியமைக்கும்.. நன்றி! நன்றி!

வேலன். February 22, 2010 at 5:26 PM  

ஆஹா...அருமை...ஆமாம் ....கவிதையின் நாயகி யார்? வாழ்க வளமுடன் வேலன்.

பிரவின்குமார் February 22, 2010 at 11:02 PM  

வாங்க.. வேலன் சார். தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
கவிதையின் நாயகி என்று யாருமில்லை சார். நாமகவே கற்பனை செய்து கொள்வதுதான் சார்.
தங்கள் கருத்துக்கு மீண்டும் ஒருமுறை நன்றி சார்.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ February 26, 2010 at 1:03 AM  

அருமையான கற்பனை வாழ்த்துக்கள் !

பிரவின்குமார் February 26, 2010 at 8:07 AM  

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ தாங்கள் வருகை தந்தமைக்கும், வாழ்த்தியமைக்கும்.. நன்றி!

மங்குனி அமைச்சர் February 27, 2010 at 6:37 AM  

சார் வணக்கம்
நமக்கு கவிதா ஞானம் எல்லாம் கிடையாது
அதுனால நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்
(பெரிய விஞ்ஞானியா இருப்பிக போல இருக்கே )

பிரவின்குமார் February 27, 2010 at 7:36 AM  

வாருங்கள் மங்குனி அமைச்சரே... தங்கள் வருகைக்கு முதலில் நன்றி.
சார் எல்லாம் வேணாம் பிரவின் என்றே கூறுங்கள். (அப்புறம் விஞ்ஞானியெல்லாம் கிடையாது ஏன் இப்படி உசுப்பேத்தி உடம்மை இரணகலமாக்குறீங்க....) மீண்டும் வருக தங்கள் கருத்துக்கு நன்றி.

சி. கருணாகரசு March 2, 2010 at 6:19 PM  

போக்கிரியாக மாற்றியதாக தெரிய வில்லை... கவிஞனாக மாற்றியதாகத்தான் தெரிகிறது... பாராட்டுக்கள்.

பிரவின்குமார் March 3, 2010 at 3:50 AM  

வாருங்கள் சி.கருணாகரசு சார். தாங்கள் வருகை தந்தமைக்கும், வாழ்த்தியமைக்கும்.. நன்றி!
மீண்டும் வருக!

Chitra March 5, 2010 at 6:46 PM  

அருமையான கவிதைகள் - ரசித்து எழுதியவை. வாழ்த்துக்கள்.

தேவன் மாயம் March 6, 2010 at 12:06 AM  

மிக அருமை !! வாழ்த்துக்கள்!!

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ March 6, 2010 at 10:50 AM  

நண்பரே புதிய பதிவு எப்பொழுது .

செம்புலம் March 7, 2010 at 4:46 AM  

பிரவீன் கவிதை நன்று... வாழ்த்துகள்.

//ஆழ்வாராய் இருப்பவனையும்,

போக்கிரியாய் மாற்றிடுவாள்...!//

ஆழ்வாரும் வேலை வெட்டி இல்லாதவன்தான், போக்கிரியும் வேல வெட்டி இல்லாதவன்தான். பொருள்குற்றம் களையட்டும்.

- சென்னைத்தமிழன்

பிரவின்குமார் March 8, 2010 at 7:24 AM  

//Chitra said...
அருமையான கவிதைகள் - ரசித்து எழுதியவை. வாழ்த்துக்கள்.//
தாங்கள் வருகை தந்தமைக்கும், வாழ்த்தியமைக்கும்.. நன்றி மேடம்!
மீண்டும் வருக!

//தேவன் மாயம் said...
மிக அருமை !! வாழ்த்துக்கள்!!//
தாங்கள் வருகை தந்தமைக்கும், வாழ்த்தியமைக்கும்.. நன்றி சார்!
மீண்டும் வருக!

//♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...
நண்பரே புதிய பதிவு எப்பொழுது .//

மிக்க நன்றி நண்பரே... இனிமேல் தங்கள் ஆதரவால் விரவாக பதிவிடுகிறேன்.

சென்னைத்தமிழன் சார்
தாங்கள் வருகை தந்தமைக்கும், வாழ்த்தியமைக்கும்.. நன்றி!
கவிதை நடையை இனி மாற்றிக்கொள்கிறேன்.

அனைவரும் மீண்டும் வருக!

vidivelli March 9, 2010 at 7:26 AM  

உங்கள் தமிழ் பற்றை கண்டதும் இயல்பாகவே உங்கள் தளத்திற்குள் நுழைய விரும்பினேன்.
உங்களைப் போல ஒருவர் தான் நானும்........
தொடருங்கள்..................
பின் தொடர்வேன்..........
புதிய அபிமானி..


அருமையான கவிதைகள்

பிரவின்குமார் March 10, 2010 at 2:12 AM  

தாங்கள் வருகை தந்தமைக்கும், வாழ்த்தியமைக்கும்.. நன்றி மேடம்!
மீண்டும் வருக!

r.v.saravanan March 30, 2010 at 2:56 AM  

வாழ்த்துக்கள் நண்பரே

உங்கள் கவிதைகள் நன்று

உங்கள் வலை தளத்தில்

தொடர்வேன் இனி .........

r.v.saravanan
kudanthaiyur.blogspot.com

தங்களது கருத்துகளை பகிர்ந்திடுங்கள்
அவசியம் தமிழில் சொல்லுங்க.
Loading...

கரை தொடாத கனவுகள் !!!

About This Blog

அண்மையில் பதிந்தவை

Blog Top Sites

Lorem Ipsum

1

தமிழ் 10

Footer

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP